மைத்திரியின் தலைமையில் செயற்பட மகிந்த தயார்! டிலான் பெரேரா
பொது தேர்தலின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொண்டு அவரின் கீழ் வேலை செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இணக்கம் வெளியிட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடக பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கான பேச்சுக்கள் மேற்கொள்ளப்படுகின்றதா என டிலான் பெரேராவிடம் கொழும்பு சிங்கள இணையம் எழுப்பிய கேள்விக்கே டிலான் பெரேரா இவ்வாறு பதிலளித்தார்.
சந்திரிக்கா குமாரதுங்க ஜனாதிபதியாக செயற்பட்ட போது, மஹிந்த ராஜபக்ச பிரதமராக ஒன்றுமையுடன் செயற்பட்டதனை போது செயற்படவுள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இணக்கப்பாட்டில் முன்னணியினால் முன்வைக்கப்பட்டுள்ள “எதிர்காலத்திற்கு சான்றிதழ்” என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தை வெற்றியுடன் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என டிலான் பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளார்.








