வன்னி வேட்பாளர் ஒருவரின் போஸ்டர், கையேடுகளுடன் நால்வர் கை
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் கே.கே.மஸ்தானின் போஸ்டர், ஸ்டிக்கர்கள் மற்றும் யையேடுகளுடன் வேன் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்டு கருவலகஸ்வெவ பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். எட்டாம் திகதி இரவு புத்தளம் - அனுராதபுரம் வீதியின் கருவலகஸ்வெவ பிரதேசத்தில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும் சந்தேகநபர்கள் பயணித்த வேனில் இருந்து போஸ்டர், ஸ்டிக்கர்கள் மற்றும் கையேடுகள் 14,464 கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன் சந்தேகநபர்களை புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த மேலதிக விசாரணைகளை கருவலகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








