113 ஆசனங்களுக்குக் குறைவாக பெற்றாலும் ஆட்சியமைக்க ஆதரவு இருக்கிறது! மகிந்த
பொதுத் தேர்தலில் 113 ஆசனங்களுக்குக் குறைவாக தமது கட்சி பெற்றுக்கொண்டாலும் அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவு வழங்க ஏராளமானோர் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எனினும், தேர்தலில் 117 ஆசனங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றின் அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 9ஆம் திகதி அதிகாலை தான் அலரிமாளிகையை விட்டு வெளியேறியது மீண்டும் அரசியலுக்கு வரும் எதிர்பார்ப்பில் அல்ல என்றும் எனினும் மக்களின் வேண்டுகோளுக்கமைய தான் மீண்டும் அரசியலுக்கு வர நேரிட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.








