ஐ.ம.சு.மு. வெற்றிபெற்றால் பௌசியை பிரதமராக்கத் திட்டம்!
பொதுத்தேர்தலில் ஐக்கியமக்கள் சுதந்திரமுன்னணி வெற்றிபெற்றால் எ.எச்.எம்.பௌசியை பிரதமராக தெரிவுசெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.
அரசியல் முதிர்ச்சிபெற்ற தலைவர்கள் சிலரின் பெயரை பிரதமரின் பதவிக்கான பெயர்ப் பட்டியலில் இணைத்து மகிந்தவுக்கு அனுப்பிய கடிதத்தில் ஜனாதிபதி மைத்திரி சுட்டிக்காட்டியிருந்தார்.அந்த பட்டியலின் படி பௌசியை பிரதமராக தெரிவுசெய்ய அதிக வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது.








