Breaking News

மகிந்தவுக்கு மைத்திரி அனுப்பிய கடிதத்தின் பின்னணியில் சந்திரிகா!

மகிந்தவை தேர்தலில் தோற்கடிக்கும் முகமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் திட்டத்துடனேயே ஜனாதிபதியின் கடிதம் அமைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதித் தேர்தலில் வகுக்கப்பட்ட திட்டங்களைப் போன்று பொதுத் தேர்தலில் மகிந்தவைத் தோற்கடிக்கும் வகையில் சந்திரிக்கா திரை மறைவில் செயற்பட்டுவருகிறார் என்று மகிந்த தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மைத்திரி சந்திரிகாவின் ஆள் என்பதால் மைத்திரிபால சிறிசேன மகிந்தவுக்கு அனுப்பிய கடிதத்தின் பின்னணியில் சந்திரிகா இருக்கிறார் என அவர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.