தேர்தல் விதிமுறையை மீறினார் சரா
தேர்தல் விதிமுறையை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளரான ஈ.சரவணபவனின் ஆதரவாளர் ஒருவர் வட்டுக்கோட்டைப்பகுதியில் வைத்து நடமாடும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்
வட்டுக்கோட்டைப்பகுதியிலுள்ள வாக்களிப்பு நிலையமொன்றிற்கு முன்னால் சரபவணபவனிற்கு ஆதரவான துண்டுப்பிரசுரங்களை வீச முற்பட்டபோதே குறிதத் ஆதரவாளர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளபர்
கைது செய்யப்பட்டவர் யாழ் மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
மேலும் இன்று காலை யாழ் நகரின் பெரும்பாலான வீதிகள் மற்றும் வீடுகளிற்குள்ளும் குறித்த சரவணபவனின் துண்டுப்பிரசுரங்கள் இனம்தெரியாதவர்களால் வீசப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.








