Breaking News

சனல் 4 செய்திகள் பொய்-மகிந்தவின் பாணியில் சுமந்திரன்(காணொளி)

சுமந்திரனின்  நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில்
சனல் 4 ஆல் (காலம் மக்ரே மூலமாக) கசிய விடப்பட்ட ஆவணம் ஓர் திட்டமிடப்பட்ட புனைவு ஜெனீவா விசாரணைக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை. அது UN நியூயார்க் அலுவலகத்தால் முன்னெடுக்கப்படும் ஒரு சமதானத்தை கட்டியெழுப்பும் (Peacebuilding) செயற்திட்டம். அதற்கும் ஜெனீவா விசாரணைக்கும் சம்பந்தமில்லை. இதனை பொறுப்பாக சொல்கிறேன். ஐ. நா பிரதிநிதியிடம் நான் கதைத்துள்ளேன்" என்று  கூறிய கருத்துக்கு கலம் மக்ரே ட்விட்டரில் பதில் அளித்திருக்கிறார்.
இந்த கேள்விக்கு கலம் மக்ரே அளித்த ருவிற்றர் பதில்

"எமது செய்தியில் என்ன புனைவு இருக்கின்றது என்று எனக்கு தெரியவில்லை. எமது செய்தி 100 % உண்மை. 


கசிய விடப்பட்ட ஆவணம் ஜெனீவா விசாரணை பற்றி குறிப்பிடவில்லை அதை ஒதுக்குகின்றது என்பதே இங்கு பிரச்சனை. அதே வேளை (இந்த விசாரணையை நடாத்தும்) ஜெனீவா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் தான் இந்த உள்ளக விசாரணையை வழிநடத்தும் என்று கூறுகின்றது. அது தான் இங்கு கரிசனை. ஜெனீவாவை புறம் தள்ளி நியூ யார்க் மற்றும் கொழும்பு அலுவலகங்கள் செயற்படுகின்றனவா என்ற கேள்வியை நாம் எழுப்புகின்றோம்"










முன்னைய செய்திகள்

இலங்கைக்கு எதிராக எந்த தீர்மானமும் வேண்டாம்-சுமந்திரன்(காணொளி)