Breaking News

வடக்கில் பொலிஸ் நிலையங்கள் மூடப்படுமென விஜயகலா கூறியுள்ளமை ஆபத்தானது

ஐக்­கிய தேசியக் கட்சியின் ஆட்­சியில் வடக்கில் அனைத்து பொலிஸ் நிலை­யங்­களும் மூடப்­படும் என விஜ­ய­கலா மகேஸ்­வரன் தெரி­வித்­தி­ருப்­பது பிரி­வி­னைக்­கான பயங்­கர எச்­ச­ரிக்­கை­யாகும் என்று நாக விகாரை விஹா­ரா­தி­பதி நவ­த­கல பதும கீர்த்தி தேரர் தெரிவித்தார்.

எதிர்­வரும் 17 ஆம் திகதி சிங்­கள தேசம் கட்­டி­யெ­ழுப்­பா­விட்டால் நாடு பறி­போகும். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எந்தக் கட்­சியை சேர்ந்­த­வ­ரென்று தெரி­யாத நிலை­யுள்­ளது என்றும் குறிப்பிடடார். கொழும்பு விஹா­ர­ம­கா­தேவி உள்­ளக அரங்கில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ கலந்துகொண்ட நிகழ்வில் உரை­யாற்­றும்­போதே நாக விஹா­ரா­தி­பதி இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்

அண்­மையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க யாழ்ப்­பாணம் வந்தார். அவர் கலந்து கொண்ட கூட்ட மேடை பிரிக்­கப்­பட்டு இலங்கை ஈழ வரை­படம் வைக்­கப்­பட்­டி­ருந்­தது. அதற்­குள்­ளேயே பிர­தமர் ரணில் உரை­யாற்­றினார். விடு­தலைப் புலிகள் இருந்த காலத்தில் இந்த வடி­வி­லேயே ஈழ முத்­தி­ரையை வெளி­யிட்­டி­ருந்­தனர்.

இந்த மேடையில் விஜ­ய­கலா மகேஸ்­வ­ரனும் அமர்ந்­தி­ருந்தார். ஐ.தே.கட்சி ஆட்சி உரு­வான பின்னர் வடக்கில் அனைத்து பொலிஸ் நிலை­யங்­களும் மூடப்­பட்டு பொலிஸார் வடக்­கி­லி­ருந்து வெளி­யேற்­றப்­ப­டு­வார்கள் என விஜ­ய­கலா மகேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.

அவ­ரது இக்­க­ருத்து பிரி­வி­னைக்­கான பயங்­க­ர­மான கருத்­தாகும்.  யாழ்ப்­பா­ணத்தின் இன்­றைய நிலைமை மோச­மாக மாறி­யுள்­ளது.தெற்­கி­லி­ருந்து வரும் யாத்­தி­ரி­கர்கள் தாக்­கப்­ப­டு­கி­றார்கள். விஜ­ய­கலா மகேஸ்­வரன் மிரட்­டு­கின்றார். இது தொட­ரு­மானால் வட மாகாணம் தமி­ழர்­களின் ஆக்­கி­ர­மிப்­பிற்கு உள்­ளா­கி­விடும்.

எனவே எதிர்­வரும் 17ஆம் திகதி சிங்­கள மக்கள் ஒன்­றி­ணைந்து சிங்­கள தேசி­யத்தை கட்­டி­யெ­ழுப்ப வாக்­க­ளித்து மஹிந்த ராஜபக் ஷவை இந் நாட்டின் பிர­த­ம­ராக்க வேண்டும். இங்கு நான் இவ்­வாறு பேசி­விட்டு யாழ்ப்­பாணம் செல்ல முடி­யுமோ என்ற நிலை­யுள்­ளது. ஆனால் நான் இதற்­கெல்லாம் அஞ்ச மாட்டேன்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எந்தக் கட்­சியை சேர்ந்­த­வ­ரென்று தெரி­யாத நிலை­யுள்­ளது என்றார். மெகம தம்­மா­னந்த தேரர் நிகழ்வில் மெகம தம்­மா­னந்த தேரர் உரையாற்றுகையில் இன்று கிழக்கில் இஸ்­லா­மிய அடிப்­படை வாதம் வடக்கில் ஈழத்­திற்­கான சமஷ்டி கோரிக்கை என நாடு பிரி­வ­னைக்­கான திசைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதிலிருந்து நாடு மீட்கப்பட வேண்டுமானால் மஹிந்த ராஜபக் ஷ பிரதமராக வேண்டும். ஐக்கிய தேசிய கட்சியில் கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள் போட்டியிடுகின்றனர் இது பௌத்த மதத்திற்கு ஆபத்தாகும் என்றார்.