17 ஆம் திகதிக்குப் பின்னர் மஹிந்த பிரதமராவதை யாராலும் தடுக்க முடியாது! தினேஷ் குணவர்த்தன கூறுகிறார்
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிபெறுவது நிச்சயமாகும்.
அத்துடன் எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசாங்கம் அமைவதையும் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராவதையும் யாராலும் தடுக்க முடியாது என்று மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
எட்டாவது பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரசார செயற்பாடுகள் மற்றும் தேர்தல் நிலைமைகள் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர்தல் பிரசார செயற்பாடுகளில் சிறப்பாக செயற்பட்டுவருகின்றது. கிராமப் புறங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு சிறப்பான ஆதரவு காணப்படுகின்றது. இந்நிலையில் எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி யின் அரசாங்கம் அமைவதையும் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராவதையும் யாராலும் தடுக்க முடியாது.
அந்தவகையில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிபெறுவது நிச்சயமாகும். அதனை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. கடந்த ஆறு மாதங்களில் மக்கள் பல மான வீழ்ச்சியை கண்டுவிட்டனர். எனவே எம்மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
மேலும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் ஊடாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வந்ததும் நான் முன்னின்று ஒரு முக்கிய விடயத்தை செய்யவுள்ளேன். அதாவது கல்வி பொதுத் தராதர சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைக்காலத்தில் நாட்டில் தேர்தல்களை நடத்த முடியாது என்ற வகையில் சட்ட மூலம் ஒன்றை கொண்டு வந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவோம். அதனை நானே முன்னின்று செய்வதற்கு திட்டமிட் டுள்ளேன் என்றார்.