Breaking News

மீனவர்களை விடுவிக்க கோரிக்கை

இலங்கை சிறைச்சாலைகளில் தற்போது உள்ள 40 இந்திய மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி இந்திய தேசிய மீனவர் முன்னணி கோரியுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ‘த ஹிந்து” செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் 23ஆம் திகதி இந்திய ராஜ்ய சபை அமர்வின் போது இந்திய மீனவர்கள் தொடர்பாக மத்திய ராஜாங்க அமைச்சர் வி.கே. சிங்ஹா பிரஸ்தாபித்திருந்தமை குறித்தும் வெளிவிவகார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அது தொடர்பான தவவல்கள் இந்திய தேசிய மீனவர்கள் முன்னணியின் தலைவர் என். இளங்கோவினால், மகஜர் மூலம் வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.