Breaking News

தபால் மூல வாக்களிப்புக்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது. 

இந்த முறை பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 566,823 பேர் தகுதி பெற்றுள்ளனர்.  ஆகஸ்ட் மாதம் 03ம் திகதி பொலிஸ் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும், அரச பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கும் தபால் மூலம் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இதுதவிர ஆகஸ்ட் மாதம் 05 மற்றும் 06ம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள மற்றைய வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.