Breaking News

தமிழ் சமூகத்தோடு இணைந்தே மு.கா. செயற்படுகிறது – ஹக்கீம்

தமிழ் சமூகத்தோடு இணைந்து போகின்ற எழுச்சி பெற்ற அரசியலை முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுத்து வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நகர அபிவிருத்தி அமைச்சருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,

முஸ்லிம் காங்கிரஸின் அரசியலில் புதிய யுகம் பிறந்திருக்கின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக சகோதர தமிழ் சமூகத்தோடு முரண்பாட்டு அரசியலைச் செய்யாமல் கைகோர்த்துக் கொண்டு போகின்ற எழுச்சி பெற்ற வியூகமாக அது இருக்கும்.

சரித்திரத்திலே அதிகாரத்தில் பங்கெடுக்காமல் இதுவரை ஒதுங்கி தங்களுடைய அரசியலை தனியே செய்து கொண்டிருந்த தமிழ் அரசியல் தரப்பினரை கிழக்கில் ஆளும் அதிகார வர்க்கமாக மாற்றிக்காட்டிய பெருமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு உண்டு. இந்தத் தேர்தலின் மூலம் கடந்த 10, 12 வருடகாலமாக முஸ்லிம் சமூகத்திற்கு இருந்து வந்த இருண்ட யுகம் இல்லாமலாகிவிடும

நாட்டுப் பற்று என்ற போர்வையில் போலித்தனமாக முழு சர்வதேசத்தையும் பகைத்துக் கொள்ளுகின்ற ஒரு வெளிநாட்டுக் கொள்கையைத்தான் மஹிந்த கடைப்பிடித்தார். வெளிநாட்டு முதலீடுகளை எல்லாம் தடுக்கின்ற ஒரு விதமான குருட்டு ராஜதந்திரத்தை கைக்கொண்ட ஆட்சியாளர்களை நாங்கள் விரட்டியடித்திருக்கின்றோம்.-என்றார்.