Breaking News

வானூர்தியை தேடும் பணியை விரிவு படுத்துமாறு மலேசியா கோரியுள்ளது

மலேசிய வானூர்தியினுடையது என சந்தேகிக்கப்படும் பிறிதொரு இறக்கை பாகம் கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னர் வானூர்தியை தேடும் பணியை விரிவு படுத்துமாறு மலேசிய ஏனைய இந்து சமுத்திர வலய தீவு நாடுகளை கோரியுள்ளது.

இந்து சமுத்திரத்திற்கு அருகில் உள்ள பிரான்ஸுக்கு உரித்தான மீளிணைப்பு தீவுகளுக்கு அண்மையில் இந்த பாகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த போயிங் - 777 வானூர்தி கடந்த வருடம் ஜனவரி மாதம் 239 பேருடன் மலேசியாவில் இருந்து சீனா செல்லும் போது காணாமல் போயிருந்தது. இதனைத் அடுத்து நீண்டகாலம் தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தன.

இந்த நிலையில்; பிரான்ஸுக்கு உரித்தான மீளிணைப்பு தீவு பகுதியில் பாகம் ஒன்று அண்மையில் கடலோர சுத்திகரிப்பாளர் ஒருவரால் மீட்கப்பட்டிருந்தது. அந்த பாகம் பிரான்ஸில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.  அதே பகுதியில் மற்றுமொரு பாகமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.