Breaking News

மஹிந்தவின் தேர்தல் உறுதிமொழிகளை நம்பி காத்திருக்க வேண்டாம் - அனுர

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அமைய, திருமணம் புரிவோருக்கு 2 லட்சம் ரூபா வழங்கப்படும் என்ற நம்பிக்கையில் 17 ஆம் திகதிவரை காத்திருக்க வேண்டாம் என கோரப்பட்டுள்ளது.

புதியதாக திருமணம் புரிய காத்திருக்கும் இளைஞர் யுவதிகளிடம் ஜே.வி.பியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க ஹிக்கடுவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இந்த கோரிக்கையை விடுத்தார்.

புதியதாக திருமணம் புரியும் தம்பதியருக்கு 2 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கான தேர்தல் இடம்பெறும் வரை காத்திருந்து ஏமாற்றமடைவதை தவிர்த்து கொள்ள வேண்டும். எனவே அவரின் 2 லட்சம் ரூபாவை பெற்றுக்கொள்வதற்காக இளைஞர் யுவதிகள் வாக்களிப்பாளர்கள் என்ற எண்ணத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காத்திருப்பதாக ஜே.வி.பியின் தலைவர் குறிப்பிட்டார்.