Breaking News

தோல்வியை ஏற்றார் மகிந்த! பிரதமர் பதவி கனவு பொய்த்துப் போனது!

பிரதமர் கனவு பொய்த்துப் பொய்த்துப் போனதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளதாக ஏ.எவ்.பி. சர்வதேச செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் குருணாகல் மாவட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போட்டியிட்டிருந்தார். பிரதமர் பதவியை இலக்குவைத்தே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் மகிந்த ராஜபக்ச களமிறக்கப்பட்டிருந்தார்.

8ஆவது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் முடிவுகளில் பெரும்பாலானவை வெளிவந்துள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி தற்போது முன்னிலை வகிக்கிறது. இதுவரை வெளிவந்துள்ள முடிவுகளுக்கமைய ஐக்கிய தேசியக் கட்சி 105 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 82 ஆசனங்களையும் பெற்றுக்கொள்ளும் என அதிகாரபூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.