எந்த கட்சியினரது எதிர்காலத்தையும் பொறுப்பேற்கவுள்ளோம் - பிரதமர் ரணில்
எந்த கட்சியினராக இருந்தாலும், ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிக்கும் சகலரினதும் எதிர்காலத்தையும் தாம் பொறுப்பேற்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மாவனல்ல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த கடுகன்னாவிற்கு சென்று கூறியிருக்கின்றார் 180 நாட்களில் கொடுங்கோளாட்சி நிலவியதாக கூறியிருக்கின்றார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியின் தலைவர். இதன்படி, தமது தலைவரே கொடுங்கோளாட்சி புரிந்ததாக மஹிந்த கூறியிருக்கிறார். அவர் எனக்கு எதுவும் சொல்லவில்லை, ஜனாதிபதிக்கோ கூறியிருக்கின்றார்.
இதனால் சுதந்திர கட்சி தரப்பினரர் கடுங்கோபத்தில் இருப்பதாக ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
இந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிக்கும் சகலரது எதிர்காலத்தையும் பொறுப்பேற்க தாம் தார் எனவும் அவர் குறிப்பிட்டார்.