விஜயகலாவின் செயற்பாடு ஐ.தே.க.வின் நிலைப்பாடா?
ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட வேட்பாளரான முன்னாள் பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் நிலைப்பாடும் அந்தக் கட்சியின் நிலைப்பாடும் ஒன்றா என அந்தக் கட்சியின் தலைவர்கள் அறிவிக்க வேண்டும்
என பொது பல சேனா அமைப் பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் விஜயகலா இனவாதத்தை பரப்பி மக்களை பிரிவினை வாதம் நோக்கி கொண்டு செல்கின்றார். அவர் தேர்தலில் போட்டியிடுவதென்றால் கட்சியின் கொள்கைகளை கடைப்பிடிக்க வேண்டும். இதன்படி அவர் கட்சியின் கொள்கையின் பிரகாரம் அப்படி நடந்துகொள்கின்றார் என கட்சி யின் தலை வர்கள் அறிவிக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.








