Breaking News

மின்சாரக் கதிரைக்கு மஹிந்தவை கொண்டு செல்லும் முயற்சி தீவிரம்! என்கிறது ஐ.ம.சு.மு.

யுத்த குற்­றச்­சாட்­டுகள் மூலம் மஹிந்­த ராஜபக்ஷவை மின்­சாரக் கதி­ரைக்கு கொண்­டு­செல்லும் முயற்­சிகள் பல­ம­டைந்து வரு­கின்­றன. 



தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும், அர­சாங்­கமும், சர்­வ­தேச அமைப்­பு­களும் மஹிந்­தவை தண்­டிக்க முயற்­சிக்­கின்­றன என ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி தெரி­வித்­தது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மஹிந்­தவை காப்­பாற்­றுவார் என்ற நம்­பிக்கை உள்­ளது. ஆனால் ரணில் மீது துளி­ய­ள­வேனும் நம்­பிக்கை இல்லை எனவும் அந்த முன்­னணி குறிப்­பிட்­டது.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் செய்­தி­யாளர்

சந்­திப்பு நேற்று கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தலைமை அலு­வ­ல­கத்தில் நடை­பெற்­றது. இதில் கலந்­து­கொண்­டி­ருந்த ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் உறுப்­பினரும் முன்னாள் அமைச்சருமான டிலான் பெரேரா கருத்து தெரிவிக்கையிலேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

போர்க்­குற்ற விசா­ர­ணை­களின் மூலம் குற்­ற­வா­ளிகள் தண்­டிக்­கப்­ப­டு­வதும், மின்­சாரக் கதிரை கதை­களும் பொய்­யான கூற்றுக்கள் என்றே நாம் நினைத்தோம். ஆனால் இப்­போ­தி­ருக்கும் நிலை­மை­களை பார்க்­கும்­போது மின்­சாரக் கதிரை கதைகள் பொய்­யா­னது அல்ல என்று தோன்­று­கின்­றது. யுத்­தத்தில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் போர்க் குற்­றச்­சாட்­டு­களில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ உள்­ளிட்ட முக்­கிய நபர்­களை தண்­டிக்க வேண்டும் என சர்­வதே புலம்­பெயர் அமைப்­புகள் மற்றும் இங்­குள்ள இன­வாத தரப்புக்கள் தெரி­வித்து வரு­கின்­றன. அதனை உறு­திப்­ப­டுத்தும் வகையில் இலங்­கையின் அண்­மைக்­கால செயற்­பா­டுகள் அமைந்­துள்­ளன.

குறிப்­பாக யுத்த குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் சர்­வ­தேச விசா­ர­ணையே அவ­சியம் என்றும், சர்­வ­தேச விசா­ரணை அறிக்­கையின் மூலம் குற்­றங்கள் கண்­டறியப்­ப­டுதல் அவ­சியம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அதன் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் தெரி­வித்­துள்­ளது. எனினும் சர்­வ­தேச விசா­ர­ணைக்கு அனு­ம­திப்­ப­தில்லை என அர­சாங்கம் குறிப்­பிட்­டாலும் உள்­ளக பொறி­மு­றைகள் மூலம் போர்க்­குற்ற விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­ப­தாக கூறு­கின்­றது. 

அதேபோல் உள்­ளக விசா­ரணைப் பொறி­மு­றையின் போது வட­மா­காண சபைக்கு முக்­கிய பங்­கினை வழங்­கப்போவதாக தெரி­வித்­துள்­ளனர். மேலும் இலங்கை மீதான சர்­வ­தேச விசா­ர­ணைகள் தொடர்பில் சனல் 4 இன் அறிக்கை கசிந்­துள்­ளது. இதிலும் போர்க்­குற்­ற­வா­ளி­களை தண்­டிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தா­கவும் கூறப்­ப­டு­கின்­றது.

மிகவும் முக்­கி­ய­மாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் அண்­மைக்­கால செயற்­பா­டுகள் மோச­மா­ன­தா­கவே அமைந்­துள்­ளன. எமது ஆட்­சியில் 13ஆம் திருத்தச் சட்டத்தில் அதி­கா­ரங்கள் போது­மென கூறி­ய­வர்கள் இப்­போது 13க்கு அப்பால் சென்று சுய­நிர்­ணய கோரிக்­கை­களை முன்­வைத்­துள்­ளனர். ஆகவே மஹிந்­தவை மின்­சா­ரக்­க­தி­ரைக்கு கொண்­டு­செல்லும் தீவிர முயற்­சி­களை இவர்கள் மேற்­கொள்­கின்­றனர்.

கேள்வி :- மஹிந்­தவை தண்­டிக்க அனு­ம­திக்­க­மாட்டோம் என பிர­தமர் கூறி­யுள்­ளாரே?

பதில் :- மஹிந்த ராஜபக் ஷவை மின்­சா­ரக்­க­திரைக்கு கொண்­டு­செல்ல ஒரு­போதும் அனு­ம­திக்கப் போவ­தில்லை என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கடந்த பல சந்­தர்ப்­பங்­களில் தெரி­வித்­துள்ளார். யுத்த கால­கட்­டத்தில் எம்­முடன் இணைந்து வெற்­றிக்கு வித்­திட்­ட­வர்­களில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பங்கும் உள்­ளது. கடந்த ஜனா­திபத் தேர்­தலின் போதும் அவர் மஹிந்­தவை மின்­சாரக் கதி­ரைக்கு கொண்­டு­செல்ல ஒரு­போதும் அனு­ம­திக்க போவ­தில்லை என்­பதை குறிப்­பிட்­டி­ருந்தார். 

ஆனால் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை நாம் ஒரு­போதும் நம்­பப்­போ­வ­தில்லை. ரணில் விக்கிரமசிங்க அனைத்து சந்தர்ப்பங்களிலும் சர்வதேச பிரிவினைவாத அமைப்புகளுடனும் புலிகளுடனுமே செயற்பட்டவர். ஆகவே இப்போதும் அவர் சர்வதேச விசுவாசியாகவே செயற்பட்டு வருகின்றார். மஹிந்தவை மின்சாரக் கதிரைக்கு அனுமதிக்க அவர் நினைத்தாலும் இந்த நாட்டின் சிங்கள மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். அதை தெரிந்துகொண்டே ரணில் இவ்வாறு கூறுகின்றார் என்றார்.