Breaking News

மாற்றத்தை பாதுகாக்க வேண்டும் -கபீர் ஹாசீம்

ஜனவரி 8ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட மாற்றத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கையில், முன்னோக்கி வந்த பயணத்தை பின்னோக்கி செல்ல இடமளிக்கப்படக் கூடாது. யுத்த வெற்றியின் பின்னர், நாடு வெற்றிக்கொள்ளவிருந்த தேசிய நல்லிணக்கம் மற்றும் சமத்துவம் என்பன ஏகாதிபத்தியத்தால் பெற்று கொள்ள முடியாது போனது.

அந்த பின்னடைவை மாற்றிய வெற்றியை பறிக்க இடமளிக்க கூடாது என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.