இன்றும் தபால்மூலம் வாக்களிக்கலாம்
தபால் மூலம் இதுவரை வாக்களிக்காத அரச உத்தியோகத்தர்கள் இன்று சனிக்கிழமை, தத்தமது பிரதேச, மாவட்ட செயலகங்களில் தபால் மூலமாக வாக்களிக்கமுடியும். என்று தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு கடந்த மூன்று தினங்களாக இடம்பெற்றது. 3 ஆம் திகதி ஆசிரியர்கள் மற்றும் பொலிஸாருக்கும், 5 ஆம் திகதியும், நேற்று முன்தினம் 6 ஆம் திகதியும் ஏனைய அரச உத்தியோகத்தர்களுக்குமாக தபால்மூல வாக்களிப்பு இடம்பெற்றது.
இந்த மூன்று தினங்களிலும் வாக்களிக்கத் தவறியவர்களுக்கு இன்று 8 ஆம் திகதி மீளவும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. தத்தமது மாவட்ட செயலகங்களுக்குச் சென்று அரச உத்தியோகத்தர்கள் வாக்களிக்கமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.








