நாட்டில் தற்போது ஊடகங்களுக்கு பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது: மங்கள
நாட்டில் தற்போது ஊடகங்களுக்கு பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நாட்டில் எதைப்பற்றியும் எழுதுவதற்கு ஊடகங்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாத்தறையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டமொன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்களை ஊடகங்கள் அம்பலப்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். வெள்ளை வான்களினால் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்கள் எதுவும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் புதிய அரசியல் கலாச்சாரமொன்றை உருவாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.








