கஜேந்திரகுமார் சொல்வது உண்மை - இரா சம்பந்தன் (காணொளி)
அண்மையில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில்
கலந்துகொண்ட மாவை சேனாதிராஜா இறுதி யுத்தத்தில் கஜேந்திரகுமார் விடுதலைப்புலிகள் சரணடைவு தொடர்பாக அரசுடன் இரகசிய பேச்சுக்களை நடத்தியிருந்ததாகவும் ஆனால் தமது கட்சிக்கு தெரியாது என ஆவேசமாக தெரிவித்திருந்தார்.
ஆனால் அதனை மறுநாளே அறுதலித்திருந்த கஜேந்திரகுமார் சம்பந்தன் தொலைபேசியை அணைத்துவிட்டதாகவும் புலிகள் அழிக்கப்படும்வரை இந்தியாவில் தமிழ்த் தலைமைகள் இருந்ததாகவும் மாவையுடன் தான் பேசியதாகவும் தெரிவித்தார்.(காணொளி கீழே)
இது இவ்வாறிருக்க மாவை தெரிவித்ததற்கு எதிர்மாறாக த.தே.கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் கஜேந்திரகுமார் இறுதி நாட்களில் தன்னுடன் பேசியது உண்மையே என தெரிவித்ததோடு கடைசிநாள் தொடர்பெடுத்ததற்கு தான் பதிலளிக்காமை பற்றி எதுவும் சொல்லவில்லை.
மேலும் சந்திரகாந்தன் ஐ.நாவில் சாட்சி அளித்ததாக மாவை சொல்லியபோதும் இதுவரை சந்திரகாந்தன் எங்கும் சாட்சியமளிக்கவில்லை அவர் ஒரு அறிக்கையை மாத்திரம் கையளித்தார் என்பதே உண்மை அதனையும் அவர் தனது செவ்வி யொன்றில் தெரிவித்துள்ளார்.
கஜேந்திரகுமார் 12.02.2015 இல் யாழில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தான் மக்கள் தீர்ப்பாயத்தில் சாட்சியமளித்ததாக கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கீழே உள்ள காணொளியில் சந்திரகாந்தன் தான் இந்த விடயங்களை ஐ.நாவிற்று அறிக்கையாக வழங்கியிருப்பதாகவே தெரிவிக்கின்றார். காணொளியில் 4.51ஆவது நிமிடத்திலிருந்து காணலாம். ஆனால் அவர் ஐ.நாவில் சாட்சியமளித்ததாக மாவை சேனாதிராஜா தனதுரையில் தெரிவித்துள்ளார்.








