Breaking News

இன்று சுமந்திரனின் சறுக்கி போன இரண்டு ராஜதந்திரங்கள்!

பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள் இன்று நள்ளிரவுடன்
முடிவடைய உள்ள நிலையில் சுமந்திரன் அவசர அவசரமாக இரண்டு ராஜதந்திர செயற்பாடுகளில் இறங்கியிருந்தார்.

ஒன்று பல்கலைக்கழக கலைப்பீடத்தை சேர்ந்த ஒருவரை கொண்டு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் த.தே.கூட்டமைப்புக்கு சார்பாக அறிக்கை ஒன்றை வெளியிடுவது.

இரண்டாவது புலத்திலுள்ள தமிழர்களுக்கு சார்பான சிலரது படத்தை போட்டு அவர்களூடாக தான் ராஜதந்திரியாக காட்டி வடக்கு மக்களிடம் வாக்கு கேட்பது. கிட்டத்தட்ட இரண்டு திட்டமுமே இன்று காலைவாரி விட்டுள்ளது. 

இன்றைய தினக்குரல் பத்திரிகையில் 11ஆம் பக்கத்தில் சுமந்திரனால் வழங்கப்பட்ட படங்கள் அடங்கிய விளம்பரம் தங்களின் எந்த ஒப்புதலுமின்றி பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருப்பதாக பலர் தொலைபேசி வாயிலாக தெரியப்படுத்தியுள்ளனர்.

இதில் அவரால் வழங்கப்பட்ட புகைப்படத்தில் உள்ளவர்களில் முக்கியமான நபரான எஸ்.சிவதாசன் என்பவர் முன்னாள் சனாதிபதி சந்திரிக்காவின் முக்கிய நண்பரும் சந்திரிக்காவின் அமைச்சின் செயலாளருமாக இருந்தவர் என தமிழ்கிங்டொம் தளத்திற்கு கிடைக்கும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. அத்துடன் அவர் சுமந்திரனைப்போல விடுதலைப் புலிகளுக்கும் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு எதிரானவராகவும் இருந்தவராவார். தற்போது தமிழருக்கு சார்பானவராக காட்டிவருபவராவர். இவரைதான் சந்திரிக்கா சார்பில் பிரச்சாரத்திற்காக சுமந்திரனுக்கு பரிந்துரைக்கப்பட்டவராவார்.



அடுத்து முக்கியமாக கலாநிதி சேரன் உருத்திரமூர்த்தி என்பவர் தனது முகநூலிலேயே 3மணிநேரத்திற்கு முன்னர் பதிவிட்டிருந்தார் தனது ஒப்புதலின்றி பிரசுரிக்கப்பட்டிருப்பதாக. (அவரது முகநூல் குறிப்பு இணைக்கப்படுகிறது-அதனையும் தற்போது சுமந்திரன் தனது மென்வலு ராஜதந்திரம் மூலம் அகற்றியிருப்பதாக அறிகிறோம்) 
இரண்டாவது ராஜதந்திரமான யாழ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஐவர் அடங்கிய குழுவில் பாராளுமன்ற ஆசனம் தருவதாக கூறிய கலைப்பீட மாணவர் தலைவரை கொண்டு கலைப்பீடத்தை சேர்ந்த எந்த மாணவர் தலைவர்களுடனோ அல்லது மாணவர்களுடனோ அல்லது ஏனைய பீடத்தை சேர்ந்த பிரதிநிதிகளுடன் கலந்தாலோசிக்காமல் புதிதாக ஒரு பெயரில் அனைத்து பீடங்களின் ஒன்றியம் என்ற பெயரில் எந்த பீட மாணவர்களின் ஒப்புதலின்றி சுமந்திரனால் எழுதிகொடுக்கப்பட்ட அறிக்கை ஒன்று நேற்று ஊடகங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

வழமையாகவே அனைத்து பிடங்களுக்குமான ஒன்றுகூடல் அறையில் வைத்தே அறிக்கைகள் தயாரித்து வெளியிடுவது வழமையாக இருக்கும்போது இந்த ஐவர் அடங்கிய குழு அவசர அவசரமாக சுமந்திரனாலும் சரவணபவனாலும் ஒழுங்குபடுத்தப்பட்ட சில ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பல்கலை வாசலில் வைத்து போலி அறிக்கை வெளியாகியுள்ளது.

அந்த அறிக்கை போலியானது என்பதை இன்று அனைத்து பீட மாணவர்களும் பத்திரிகையாளர் சந்திப்பில் இன்று உறுதிப்படுத்தவுள்ளனர். அதன் மூலம் சுமந்திரனின் மிகக் கீழ்த்தரமான அரசியல் ராஜதந்திரம் கொடிகட்டி பறக்கிறது.

முன்னைய செய்திகள்

இணைய தாக்குதலை ஆரம்பித்த சின்னக் கதிர்காமர் (ஆதாரம்)