Breaking News

மார்ச்சில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்! அமைச்சரவை முடிவு

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

புதிய அமைச்சரவை நேற்று புதன்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடியபோது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.அத்துடன் புதிய தேர்தல் முறைப்படி தொகுதிகள் எல்லைக்குட்படுத்தல் தொடர்பிலான சில விடயங்கள் குறித்து ஆய்வுசெய்யப்பட வேண்டும் என்ற தீர்மானமும் இதன்போது எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தலை வீதாசார மற்றும் விருப்பு வாக்கு முறைகளை உள்ளடக்கியதான கலப்பு தேர்தல் முறையிலும் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மூன்றில் இரண்டு தொகுதி வாரி முறையிலும், மூன்றில் ஒன்று வீதாசார முறையிலும் உறுப்பினர்கள் ரெிவுசெய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.