Breaking News

ஜெனீவாவுக்கு அதிரடி தீர்மானங்கள்! தயாராகி வரும் வடமாகாண சபை!

தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு வடமாகாண சபை திட்டமிட்டுள்ளதுடன், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 47 உறுப்பு நாடுகளிடமும் அவற்றை கையளிக்க திட்டமிட்டு வருவதாக தெரியவருகிறது.

எதிர்வரும் 14ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 2ஆம் திகதி வரை ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது அமர்வு நடைபெறவுள்ளது.அந்த அமர்வில் செல்வாக்குச் செலுத்தும் நோக்குடன் வடமாகாண சபை இந்த நடவடிக்கையில் ஈடுபடவிருப்பதாக தெரியவருகிறது.

வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இன அழிப்பு தொடர்பான தீர்மானம், போர்க்குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு சர்வதேச நீதிமன்றத்தின் தேவை ஆகிய தீர்மானங்களை வடமாகாண முதலமைச்சர் விக்கேஷ்வரன் ஜெனீவாவுக்கு அனுப்பிவைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை, காணாமல் போதல், தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை போன்ற விடயங்கள் தொடர்பாகவும் வடமாகண சபை தீர்மானங்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.