Breaking News

இலங்கை விவகாரத்தில் உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கவும்! 11 தமிழர் அமைப்புகள் கோரிக்கை

இலங்கை விவ­கா­ரத்தில் உள்­நாட்டு அல்­லது கலப்பு நீதித்­துறைச் செயல்­மு­றையை நிரா­க­ரித்து, சர்­வ­தேசக் குற்­ற­வியல் நீதி­மன்­றத்தின் முன்போ, அல்­லது ஒரு சர்­வ­தேசப் பொறுப்­பு­டைமைச் செயல்­மு­றைக்கோ பரிந்­து­ரைக்­கு­மாறு 11 தமிழர் அமைப்­புக்கள் ஐ.நா மனித உரிமை ஆணை­யா­ள­ரிடம் கூட்­டாக கோரிக்கை விடுத்­துள்­ளன.

பிரித்­தா­னிய தமிழ் கன்­சர்­வே­டிவ்கள் (ஐக்­கிய இராச்­சியம்), பிரித்­தா­னிய தமிழர் ஒன்­றியம் (ஐக்­கிய இராச்­சியம்), இலங்கைத் தமிழ்ச் சங்கம் (அமெ­ரிக்கா),

சர்­வ­தேச ஈழத்­த­மிழர் பேரவை (கனடா- நோர்வே- பின்­லாந்து- டென்மார்க்- ஸ்வீடன்- ஹாலந்து- பெல்­ஜியம்- ஜெர்­மனி- பிரான்சு- சுவிட்­சர்­லாந்து- அயர்­லாந்து- இத்­தா­லி-­அ­வுஸ்­தி­ரே­லியா- நியூ­சி­லாந்­து-­மற்றும் கூட்­டாளி நாடான மொரி­சியஸ்),

பசுமைத் தாயகம் அறக்­கட்­டளை, இந்­தியா, இலங்­கையில் சமத்­து­வத்­துக்கும் நிவா­ர­ணத்­திற்­கு­மான மக்கள் (அமெ­ரிக்கா), தென்­ப­குதி பண்­பலை வானொலி (தென்­னா­பி­ரிக்கா), சுவீடன் தமிழர் மன்றம் (சுவீடன்), அனைத்­து­லக விவ­கா­ரங்­க­ளுக்­கான அமைச்­சகம்,

நாடு­க­டந்த தமி­ழீழ அர­சாங்கம், அமெ­ரிக்க ஐக்­கிய மாகா­ணங்­களின் தமிழர் அர­சியல் நட­வ­டிக்கைப் பேரவை(அமெ­ரிக்கா), உலகத் தமிழர் அமைப்பு (அமெ­ரிக்கா) ஆகிய புலம்­பெயர் தமிழர் அமைப்­புக்­களே கூட்­டாக இக் கோரிக்­கை­யினை கடந்த ஆகஸ்ட் 18ஆம் நாளன்று 2015 ஒப்­ப­மிட்டு அனுப்பி வைத்­துள்­ளன.

கோரிக்கை மனுவின் முழ­ுமை­யான வடிவம் வருமாறு;

இலங்­கைத்­தீவின் இறுதி யுத்­தத்தில், பலி­யான தமி­ழர்­க­ளுக்கும் தப்பிப் பிழைத்­தி­ருப்­ப­வர்­க­ளுக்கும் ஏற்­பட்ட விவ­ரிக்க இய­லாத பேர­ழிவைக் கொண்டு வந்த நிகழ்­வுகள் தொடர்பில் ஒரு திட்­ட­வட்­ட­மான அறிக்கை அளிக்கும் தங்கள் பணிக்­காக, உல­கெங்கும் பர­வி­யி­ருக்கும் தமிழ் மக்­களின் பிர­தி­நி­தி­க­ளா­கிய நாங்­களும், உல­கெங்கும் உள்ள தமி­ழர்­களும், உங்­க­ளுக்கும் உங்கள் அலு­வ­ல­கத்­திற்கும் எங்­க­ளு­டைய நன்­றி­யினைத் தெரி­வித்துக் கொள்­கின்றோம்.

எங்­க­ளு­டைய மக்­க­ளுக்கு ஏற்­பட்ட பாதிப்புக் குறித்த ஒரு பார­பட்­ச­மற்ற சட்­ட­பூர்வ ஆவ­ண­மாக அறிக்­கையை வெளி­யி­டு­வீர்கள் என்று நாங்கள் எதிர்­பார்க்­கிறோம்.ஒரு உள்­நாட்டுப் பொறி­மு­றையோ அல்­லது சர்­வ­தேச உறுப்­பி­னர்­களைக் கொண்ட ஒரு கலப்புப் பொறி­மு­றையோ இலங்­கைத்­தீவில் பாதிக்­கப்­பட்ட தமி­ழர்­க­ளுக்கு நீதி வழங்கக் கூடி­ய­தாக இருக்­காது என்­பதைப் பொறுப்­புடன் உங்­க­ளுக்குத் தெரி­விக்கும் இந்த மனுவை நாங்கள் உங்­க­ளிடம் சமர்ப்­பிக்­கிறோம்.

இலங்­கையை சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்தின் முன்பு விசா­ர­ணைக்கு நிறுத்­து­வதன் மூலம் மட்­டுமே நீதியை நிலை­நாட்ட முடியும் என்று நாங்கள் உறு­தி­யாக நம்­பு­கிறோம்.ஐ.நா.வின் பொதுச் செய­ல­ரு­டைய நிபுணர் குழுவின் அறிக்­கையில், இலங்­கையில் பொறுப்­பு­டைமை குறித்து (மார்ச் 31, 2011) பின்­வ­ரு­மாறு தெரி­விக்­கப்­ப­டு­கி­றது:தனது குடி­மக்­களின் உரி­மை­களை மீறு­வதில், அது மீறப்­பட்ட போது, அரசு தனது பாத்­தி­ரத்­தையும் பொறுப்­பையும் அதி­கா­ர­பூர்­வ­மாக ஒப்­புக்­கொள்­வது பொறுப்­பு­டை­மைக்கு அவ­சி­ய­மா­கி­றது.

அரசே சர்­வ­தேசக் குற்­றங்­களில் சேர்க்­கப்­படும் போது, அந்தக் குற்­றங்கள் சார்ந்த நீதியை வழங்­கு­வதில் அது எந்தப் பாத்­தி­ரத்­தையும் வகிக்க முடி­யாது.குற்­றஞ்­சாட்­டப்­பட்ட ஒருவர் தனது வழக்கில் தானே நீதி­ப­தி­யாக இருக்­க­மு­டி­யாது என்­பது ஒப்­புக்­கொள்­ளப்­பட்ட சட்­டக்­கோட்­பாடு ஆகும்.இலங்­கையில் மோத­லுக்கு அடிப்­ப­டை­யான தன்மை, இரண்டு தேசங்­க­ளுக்கு இடை­யி­லான, அதா­வது சிங்­கள தேசம் மற்றும் தமிழர் தேசம் ஆகிய இரண்டு தேசங்­க­ளுக்கு இடை­யி­லான, ஒரு மோத­லாகும். அப்­படி இருக்­கும்­போது ஓர் அரசு அதன் தீர்­மா­னத்தில் நடு­நி­லை­யான பாத்­தி­ரத்தை வகிக்­க­வேண்டும்.

இருப்­பினும், 'சுதந்­திரம்' பெற்­ற­தி­லி­ருந்து இலங்­கைத்­தீவின் வர­லாறு எடுத்­துக்­காட்­டி­யுள்­ள­படி, இலங்கை அரசு, அதன் நீதித்­துறை உட்­பட, சிங்­கள தேசத்தின் மேலா­திக்­கத்தில் உள்­ளது.அது தோற்ற அள­வில்­கூட, நடு­நிலைத் தன்­மையின் உயர்த்­திப்­பி­டிக்கத் தவ­றி­விட்­டது.

தமி­ழர்கள் இழி­வு­ப­டுத்­தப்­படும் நிலை வரும்­போது, நீதித்­துறை எப்­போதும் அர­சியல் தலை­மைக்குக் கீழ்ப்­ப­டிந்தே நடந்­து­கொள்­கி­றது, மேலும் கடந்­த­கா­லத்தின் இலங்­கையின் விசா­ரணை ஆணை­யகங்கள் அனைத்தும் அதற்குச் சான்­றாக உள்­ளன.இலங்கை மீதான ஐ.நா. மனித உரி­மை­க­ளுக்­கான உயர் ஆணை­யா­ளரின் விசா­ரணை அமைப்பின் ஆணை போர்க்­குற்­றங்­க­ளுடன் நின்­று­வி­டு­வ­தில்லை, அது சர்­வ­தேசக் குற்­றங்­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தாகும்.

அது சர்­வ­தேசக் குற்­ற­வியல் நீதி­மன்­றத்தின் ரோம் சட்­டத்தின் பிரிவு ஏ இல் வரை­ய­றுக்­கப்­பட்­டுள்­ளது. அதில் இனப்­ப­டு­கொலை, மானு­டத்­துக்கு எதி­ரான குற்­றங்கள், போர்க்­குற்­றங்கள், ஆக்­கி­ர­மிப்புக் குற்­றங்கள் ஆகி­ய­வையும் அடங்கும்.இனப்­ப­டு­கொலை என்­பது 'ஒரு தேசம், இனக்­குழு, இனம் அல்­லது மதக் குழு இன்­ன­பி­ற­வற்றை முழு­மை­யா­கவோ, பகு­தி­யா­கவோ அழிக்கும் நோக்­கத்­துடன் செய்­யப்­படும் பின்­வரும் செயல்­களில் ஏதா­வது ஒன்று' என்று பொருள்­படும் என்று 1948 இனப்­ப­டு­கொலை உடன்­பாட்டின் பிரிவு வரை­ய­றுக்­கி­றது.

இனப்­ப­டு­கொலை குறித்த இந்த வரை­ய­றை­யின்­ப­டியே, சிங்­கள இனக்­கு­ழுவால் ஏறத்­தாழத் தனிப்­பட்ட முறையில் கட்­டுப்­ப­டுத்­தப்­படும் இலங்கை அரசு, ஒரு கலப்புப் பொறி­மு­றையின் பகு­தி­யா­கவோ, உள்­நாட்டு அமைப்பின் பகு­தி­யா­கவோ, தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான இலங்கை அரசின் இனப்­ப­டு­கொலை குறித்த எந்தக் குற்­றச்­சாட்­டுக்கும் நீதி வழங்­கக்­கூ­டி­ய­தாக இருக்­காது.ஆகவே, மேற்­கண்ட வரை­ய­றைக்குள் அடங்கும் குற்­றங்­களை விசா­ரித்து ஒரு நியா­ய­மான நீதி வழங்­கு­வ­தற்கு, ஒரு வெளிப்­புற, சுதந்­தி­ர­மான சர்­வ­தேச அமைப்பு இன்­றி­யமை­யா­த­தாக இருக்­கி­றது.

இலங்­கையில், அர­சாங்­கத்தை மாற்­று­வது என்­பது நிறு­வ­ன­ம­ய­மாக்­கப்­பட்ட அதன் தற்­காப்பில் மாற்­றத்தைக் கொண்­டு­வரும் என்று சில தரப்­பி­னர் நம்­பி­வ­ரு­கின்­றனர்.இலங்கை 1948 ஆண்டில் ஒரு சுதந்­திர அர­சாக ஆன­தி­லி­ருந்து, தமி­ழர்கள் எண்­ணற்ற ஆட்சி மாற்­றங்­களைப் பார்த்­து­விட்­டனர், மேலும் அந்த ஆட்­சி­களில் ஒன்­று­கூட தமி­ழர்­களின் துய­ரத்தைத் தீர்ப்­ப­தற்கு எந்த உண்­மை­யான முயற்­சி­க­ளையும் எடுக்­க­வில்லை.

இலங்­கையின் முன்னாள் படைத் தள­பதி சரத் பொன்­சேகா பீல்ட் மார்ஷல் அந்­தஸ்­துக்கு உயர்த்­தப்­பட்­டுள்ளது. மிகவும் மோச­மான பெயர்­பெற்ற 57 ஆவது படைப்­பி­ரிவின் முன்னாள் படைத் தலைவர் மேஜர் ஜெனரல் ஜகத் தியாஸ் படைத்­த­லைமை அலு­வ­லகத் தலை­வ­ராக அண்­மையில் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.இவர்கள் இரு­வ­ருமே சர்­வ­தேச அர­சு­சாரா நிறு­வ­னங்­களால், மோச­மான சர்­வ­தேசக் குற்­றங்­களில் சேர்க்­கப்­பட்­டுள்­ளனர்.

இது பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் முகத்தில் அறை­வ­தாக மட்­டு­மின்றி, இலங்கை மீதான ஐ.நா. மனித உரி­மை­க­ளுக்­கான உயர் ஆணைய விசா­ரணை அமைப்­புக்கும் இலங்கை அர­சிடம் கோரப்­பட்ட பொறுப்­பு­டை­மையின் வெளிப்­ப­டை­யான போலித்­த­ன­மா­கவும் இருக்­கி­றது.