Breaking News

இரத்த காயங்களுடன் கிளிநொச்சியில் ஆணின் சடலம் மீட்பு!

கிளிநொச்சி, பரந்தன் உழையாள்புரம் பகுதியில் ஏ_9 வீதி ஓரமாக அடையாளம் தெரியாத ஆணின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஏ-9 வீதியூடான பயணித்த வாகனமொன்றில் இன்று அதிகாலை மோதி இந்த நபர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர். விபத்திற்குள்ளான நபரின் தலைப்பகுதியில் பலத்த காயம் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்துடன் தொடர்புடைய வாகனத்தைக் கண்டறிவதற்காக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்த நபரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.