Breaking News

இலங்கையில் நம்பகமான நீதிச் செயல்முறைகள் தேவை – அமெரிக்கா

இலங்கையில் போருடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பாக, தீர்வு காண்பதற்கு நம்பகமான நீதிச் செயல்முறைகள் தேவை என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.


ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் நேற்றைய அமர்வில், உண்மை, நீதி, இழப்பீடு, மீண்டும் நிகழாது என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பான உரையாற்றிய அமெரிக்கப் பிரதிநிதி மிச்செல் ரோல்பேர்ட்,

“ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டு, கண்காணித்த விடயங்களை நாம் மதிக்கிறோம். அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளபடி, அனைத்துலக சமூகத்தின் நம்பிக்கை மற்றும், இலங்கையின் பாதிக்கப்பட்ட சமூகங்களின் நம்பகத் தன்மையை ஏற்படுத்துவதில் தான், நீதிச் செயல்முறைகளில் சிறிலங்கா காட்டும் ஆர்வம்,  தங்கியிருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.