Breaking News

தமிழக தீர்மானத்திற்கு நன்றி தெரிவித்தார் விக்னேஸ்வரன்!

இலங்கை போர்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையினை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து தான் மகிழ்சியடைவதாகவும் தனது நன்றிகளை தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு தெரிவிப்பதாகவும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்பாணத்தில் நேற்றைய தினம் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டார்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது இலங்கை மற்றும் இந்தியா வாழ் தமிழர்களும் ஒருமித்து சர்வதேச விசாரணை ஒன்றிற்கே வலியுறுத்துகிறோம் என சர்வதேசத்திற்கு மீண்டும் தெரியப்படுத்தியப்படுத்தியிருப்பதாக தெரிவித்தார்.

சர்வதேச விசாரணை அறிவிக்கப்பட்டதன் பயனாக பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியானது நிலைநாட்டப்படும் என நம்பிக்கை தெரிவித்த அவர், தமிழகத்திலுள்ள சட்ட வல்லுனர்களும் புலமையான வழக்கறிஞர்களும் தமக்கு ஒத்துளைப்புக்களை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கில் வாழுகின்ற தமிழ் மக்கள் சார்பாகவும் பாதிக்கப்பட்ட உறவுகள் சார்பாகவும் தனது நன்றியினையும் அவர் தெரிவித்திருந்தார்.இதேவேளை தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும் தனது நன்றிகளை தெரிவித்துவரும் நிலையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் தனிப்பட்ட ரீதியில் தமது நன்றிகளை தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.