368 பீயோன் பணியிடங்களுக்கு 23 இலட்சம்பேர் விண்ணப்பம்
அரசுப் பணியிடங்களில் கடைநிலைப் பணியான,
பியூன் வேலைக்கு இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிலவும் கடும் போட்டி குறித்த செய்திகள் பிரமிக்க வைக்கின்றன.
அந்த மாநிலத்தில் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட 368 பீயோன் வேலையிடங்களுக்கு போட்டிபோட்டு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா ? -- 23 லட்சம் பேர் ! ஒரு வேலையிடத்துக்கு 6,000 பேர் போட்டியிடுகிறார்கள் என்று கணக்காகிறது.
இந்த நிலைமை உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிலவும் கடும் வேலையில்லாத் திண்ட்டாட்டத்தைக் காட்டும் ஒரு அளவுகோலாகக் கருதப்படுகிறது. இதில் இன்னும் வேடிக்கையான விஷயம் ( அல்லது வேதனையான விஷயம்) என்னவென்றால், விண்ணப்பித்தவர்களில் 300பேர் PhD முடித்தவர்களும் 2இலட்சம் பேர் பொறியியலாளர்களும் முதுகலைமானி பட்டம் முடித்தவர்களாகவும் இருக்கின்றனர்.
விண்ணப்பித்த அனைவரையும் நேர்முகத் தேர்வுக்கு அழைத்து நேர்காணல் நடத்த வேண்டுமென்றால், அது நடந்து முடிய நான்காண்டுகள் ஆகும் என்று உத்தரப்பிரதேச அதிகாரிகள் கூறுகிறார்கள். அதுவும் ஒரு நாளைக்கு 2,000 பேர்களை நேர்காணல் செய்தால் !
இந்தியாவின் மாநிலங்களின் வேலைவாய்ப்பு நெருக்கடி இந்த மாநிலத்தில் மட்டுமல்ல ஏனைய மாநிலங்களும் பெரும் பின்னிலையிலேயே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநிலங்களின் நிலை இவ்வாறு இருக்கின்ற போது செவ்வாயில் மீத்தேன் இருக்கிறதா என்பதை காண இந்தியா 2013இல் 74மில்லியன் அமெரிக்க டொலர் அதாவது இந்திய மதிப்பின்படி 450கோடி செலவிட்டு ஆராட்சி செய்கின்றோம்.
கூரையேறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம் எண்டு சொல்வது இதற்கு பொருந்துமா?
தொடர்புடைய செய்திகள்