மூன்று புலனாய்வுப் பிரிவுகளை கலைக்க தீர்மானம்
நாட்டின் பாதுகாப்பு துறையின் மூன்று பிரதான புலனாய்வுப் பிரிவுகளை கலைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புலனாய்வுப் பிரிவுகளின் செயற்பாடுகள் குறித்து பிரதமர் அரச உயர் அதிகாரிகளிடம் அறிக்கை கோரியிருந்ததுடன் பிரதமர் இந்திய விஜயத்தை முடித்து கொண்டு நாடு திரும்பியதும் அந்த அறிக்கை பிரதமருக்கு கிடைத்துள்ளது.மேற்படி அறிக்கையை அடிப்படையாக கொண்டே ஜனாதிபதியும் பிரதமரும் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
புலனாய்வுப் பிரிவினர் கடந்த 9 ஆண்டுகளாக செயற்பட்ட விதம் பற்றி இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.