ஜெனீவா அறிக்கை! செய்தி அறிக்கையிடலில் ஜனாதிபதி அதிருப்தி
ஜெனீவா அறிக்கை குறித்து சில ஊடகங்களின் செய்தி அறிக்கையிடல் அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டின் கடும்போக்குடைய அமைப்புக்கள் மக்களை பிழையாக வழிநடத்த முயற்சிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.குறுகிய அரசியல் லாபங்களின் அடிப்படையில் இவ்வாறு பிரச்சாரம் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஊடக நிறுவனப் பிரதானிகளுடன் இன்று நடத்திய சந்திப்பின் போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணை அறிக்கை விமர்சன ரீதியாகவும்இ மதிநுட்பத்துடனும் நோக்கப்பட வேண்டும் எனவும்இ சில ஊடகங்களில் வெளியிட்டு வரும் கருத்து பிழையானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருந்தால் நாடு பாரதூரமான நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிட்டிருக்கும் என அவர் சுட்க்காட்டியுள்ளார். எவ்வித கட்டுப்பாடும் இன்றி அறிக்கையை விமர்சனம் செய்வது தவறானது என அவர் குறிப்பிட்டுள்ளர்.கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதிக்கு முன்னதாக அறிக்கை வெளியிடப்பட்டிருந்தால் நிலைமை மிக மோசமாக இருந்திருக்கும் என தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கம் 19ம் திருத்தச் சட்டம்இ ஆணைக்குழுக்களை உருவாக்கியமை உள்ளிட்ட காரணிகளினால் உலகம் முழுவதிலும் இலங்கை குறித்த நன்மதிப்பு அதிகரித்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.