வலி.வடக்கில் அனுமதிக்காத வீதிகள்,பாடசாலைகள்,ஆலயங்களை விடுவிக்க இராணுவம் இணக்கம்
வலிகாமம் வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்டும் மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்ட 2 வீதிகள் 7 ஆலயங்கள் ஒரு பாடசாலை மற்றும் 60 வீடுகளை விடுவிக்க பாதுகாப்புத் தரப்பினர் இணங்கியுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலர் என்.வேதனாநாயகன் நேற்று இந்தத் தகவலை தெரிவித்தார்.
ஆட்சி மாற்றத்தின் பின் வலி. வடக்கின் காணிகள் மூன்று கட்டங்களாக ஆயிரம் ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டது. எனினும் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் வீதிகள் ஆலயங்கள் பாடசாலைகள் சிலவற்றை மக்களின் பயன்பாட்டிற்கு வழங்க இராணுவம் மறுத்தது.
கடந்த சில மாதங்கங்களுக்கு முன்னர் மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தலைமையிலான குழுவினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிதாக மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கபட்ட பகுதிகளை பார்வையிட்டிருந்தனர்
இதன்போது சாந்தை சந்தியிலிருந்து 150 மீற்றர் நீளமான வீதி, அச்சுவேலி சீமெற் வீதி மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட பகுதியிலிருந்த 60 வீடுகள் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் இவர்கள் எடுத்த நடவடிக்கை மூலம் தற்போது அந்தப் பகுதிகளை இராணுவத்தினர் விடுவிக்க இணங்கியுள்ளார்கள். இதன்படி.
சாந்தைச்சந்தியிலிருந்து செல்லும் 150 மீற்றல் நீளமான வீதியை விடுப்பதற்கும் அச்சுவேலியிலிருந்து வசாவிளான் சந்திக்கும் வரும் பாதையில் இடையில் அமைந்துள்ள மயான வீதியை விடுவிப்பதற்கும் , ,வறுத்தலைவிளானில் உள்ள தேசிய வீடமைப்பு அதிகார சபை வீட்டுத் திட்டக் காணிகள் ,ஏழுகோயில்கள், 60வீடுகள், ஒட்டகப்புலம் ரோமன் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலை, ஆகியவற்றை விடுவிப்பதற்கு மீள்குடியேற்ற அமைச்சு ஒப்புதல் வழங்கியுள்ளது. என அரச தெரிவித்தார்.








