Breaking News

சர்வதேச சிறுவர் தினம் ஒக்டோபரில் யாழில் (யாழ்.அரச அதிபர் தகவல்)

சர்வதேச சிறுவர் தினம் யாழ். மாவட்டத்தில் முதன்முறையாக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி கொண்டாடப்படவுள்ளதாக யாழ் .மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.


யாழ்.அரச அதிகர் அலுவலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், சர்வதேச சிறுவர் தினத்தை இம் முறை யாழ்.மாவட்டத்தில் கொண்டாடுவதற்கு சிறுவர் பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

அந்தவகையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி காலை 9 மணிக்கு யாழ்.வீரசிங்கம் மண்ட பத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து மாலை நேர நிகழ்வாக யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு எதிரே பழைய பூங்கா வீதியில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் சிறுவர் வன் முறை தொடர்பான விளக்கமளிக்கும் ஒளிப் படம் காட்சிப்படுத்தப்படுவதோடு சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளும் இடம்பெறவுள்ளது.

இச்சிறுவர் தினத்தையயாட்டி 2ஆம் நாள் காலை 9 மணி தொடக் கம் 12 மணிவரை பழைய பூங்கா வீதியில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் சிறுவர்களுக்கான மகிழ்வூட்டும் நிகழ்ச்சிகளும் அவர்களுக்கான போட்டிகளும் பரிசில்கள்வழங்கும் நிகழ்வுகளும் நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 3ஆம் திகதி மல்லாகம் மகா வித்தியாலயத்தில் சிறுவர்களுக்கான மருத்துவ முகாம் காலை 9 மணி தொடக்கம் 2 மணிவரை நடைபெறவுள்ளது.

இந்த மருத்துவ முகாமில் அனைத்து சிறுவர்களும் கலந்து கொள்ள முடியும். அத்துடன் சிறுவர் தின நிகழ்வு களுக்காக ஒவ்வொரு பிரதேச செயலகத்தின் ஊடாகவும் சிறுவர்கள் அழைத்துவரப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச சிறுவர் தின நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்வதாக குறிப்பிடப்பட் டது. அவர் வெளிநாடு செல்லவிருப்பதால் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளமாட்டார் என அவர் மேலும் தெரிவித்தார்.