Breaking News

பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐ.நா விசாரணை அறிக்கை இன்று வெளியாகிறது

இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணைகளின் அறிக்கை இன்று பகிரங்கமாக வெளியிடப்படவுள்ளது.

மத்திய ஐரோப்பிய நேரப்படி இன்று காலை 10.30 மணிக்கு இந்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்படும். அத்துடன், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் இணையத்தளத்திலும் இது வெளியிடப்படவுள்ளது.

அதேவேளை, இந்த அறிக்கையின் கண்டறிவுகள் பரிந்துரைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கான ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் ஜெனிவாவில் இன்று நடத்தவுள்ளார்.

இந்த ஊடக மாநாடு ஜெனிவா நேரப்படி இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெறவுள்ளதாக, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் அறிவித்துள்ளது.இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணை தொடர்பான இந்த அறிக்கை அனைத்துலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.