மோடி – மைத்திரி நியூயோர்க்கில் சந்திப்பு
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நியூயோர்க்கில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இலங்கை நேரப்படி இன்று அதிகாலையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஐ.நா பொதுச்சபையின் 70 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்க நியூயோர்க் சென்றுள்ள இந்தியப் பிரதமரும், இலங்கை ஜனாதிபதியும் இந்தப் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.
இதன்போது பேசப்பட்ட விடயங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும் ஜெனிவா விவகாரம் உள்ளிட்ட இருதரப்பு விவகாரங்கள் குறித்துப் பேசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கி்ன்றன.








