Breaking News

கபாலியில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கும் தன்ஷிகா

ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் படம் ‘கபாலி’. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் மிக விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ராதிகா ஆப்தேவும், ரஜினிக்கு மகளாக தன்ஷிகாவும் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் ராதிகா ஆப்தே, குடும்பப்பெண் வேடத்தில் நடித்து வரும் நிலையில் அவருடைய மகளாக நடிக்கும் தன்ஷிகா அதற்கு முற்றிலும் மாறுபட்டு மிகவும் போல்டான கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே தன்ஷிகா போதை பழக்கத்திற்கு அடிமையாகி, வில்லன்களிடம் மாட்டிக்கொள்வது போன்ற காட்சிகள் இந்த படத்தில் இருப்பதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால், தற்போது ஆண்கள் அணியும் உடைகளுடன், ஷார்ட் ஹேர்ஸ்டைல் லுக்கில் நடிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தவுடன், அடுத்தகட்டமாக மலேசியா மற்றும் ஹொங்கொங் செல்லவுள்ளனர்.

ரஞ்சித் இயக்கி வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார். கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை பெரும்பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.