Breaking News

இலங்கையின் முடிவுக்கு பிரித்தானியா வரவேற்பு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட நான்கு நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவுக்கு இணை அனுசரணை வழங்க இலங்கை எடுத்துள்ள முடிவை, பிரித்தானியா வரவேற்றுள்ளது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பிரித்தானியாவின் வெளிவிவகாரப் பணியக மற்றும் கொமன்வெல்த் விவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வயர், ஜெனிவா தீர்மானத்துக்கு இலங்கை ஒத்துழைக்க முன்வந்திருப்பது, முரண்பாட்டு மரபுக்குத் தீர்வு காணும், மற்றொரு நெருக்கமான நகர்வு என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா, பிரித்தானியா, மசிடோனியா, மொன்ரெனிக்ரோ ஆகிய நாடுகளால் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கவுள்ளதாக, இலங்கை நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.