Breaking News

இலங்கை வரும் ஐ.நா குழு

பலவந்தமாக அல்லது விருப்பத்துக்கு மாறாக காணாமல் போனோர் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர்கள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. 


நவம்பர் 9ம் திகதி முதல் 18ம் திகதி வரை இவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜெனீவாவில் இடம்பெறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.