Breaking News

ஜனாதிபதி அமெரிக்காவுக்கு விஜயம்

ஐக்கிய நாடுகளின் 70வது பொது சபை கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அமெரிக்காவுக்கான விஜயத்தை ஆரம்பித்துள்ளார். 

எதிர்வரும் 30ம் திகதி அமெரிக்காவின் நேரப்படி காலை 9.45க்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது சபை மாநாட்டில் உரையாற்றவுள்ளார். 

அதேநேரம் இந்த மாதம் 27ம் திகதி அவர் பொருளாதார மாநாட்டில் உரையாற்றவுள்ள அதேநேரம், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். 

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் மகிந்த சமரசிங்க ஆகியோரும் இந்த விஜயத்தில் உடன் சென்றுள்ளனர். 

இதேவேளை 70வது பொது சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரச தலைவர்கள் நியுயோர்க் நகருக்கு சென்றுள்ளனர். சீனாவின் ஜனாதிபதி ஏற்கனவே அமெரிக்கா சென்றுள்ளார்.  இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி நாளையதினம் அமெரிக்கா செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.