Breaking News

முதலமைச்சரின் காலில் விழுந்து கதறிய உறவுகள் -படங்கள்

நீண்டகாலமாக சிறைவைக்கப்பட்டுள்ள தங்களது
பிள்ளைகளை மீட்டுத்தருமாறு கோரி தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் சிலர் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரனை சந்தித்து கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

யுத்தக் குற்றங்கள், மனித உரிமை மீறல்களுக்கு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கிளிநொச்சியில் இருந்து நடத்தப்பட்ட நடைபயணம் இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் நிறைவடைந்தது. இதன்போது வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் சர்வதேச விசாரணையை கோருகின்ற மகஜர் ஒன்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கத்தினால் கையளிக்கப்பட்டுள்ளது. 

இதன்போது முதலமைச்சரை சூழ்ந்திருந்த காணாமல் போனோர் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோரும், உறவினர்களும் தங்களது மன வேதனையை கண்ணீர்மல்க வெளிப்படுத்தினார்கள். எங்கள் பிள்ளைகளை மீட்டுத்தாருங்கள் என்று கண்ணீருடன் வடக்கு முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.