Breaking News

வடக்கு, கிழக்கு பிரச்சினை தீர்வுக்கு தேசிய அரசாங்கம் அடித்தளமாகும் - கிரியெல்ல நம்பிக்கை

வடக்கு, கிழக்கு பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தற்கும், புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்கும் இரண்டு பிர­தான கட்­சிகள் இணைந்த தேசிய அர­சாங்கம் அடித்­த­ள­மாக அமையும் என நம்­பிக்கை தெரி­வித்த முன்னாள் அமைச்­சரும், சபை முதல்­வ­ரு­மான லக்ஷ்மன் கிரி­யெல்ல.

மஹிந்த ராஜபக்ஷ ஐ.நா.வுக்கு வழங்­கிய உறு­தி­மொ­ழி­யையே இன்­றைய புதிய அரசு நிறை­வேற்ற வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது என்றும் தெரி­வித்தார்.

எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்தின் புதிய சபை முதல்­வ­ராக தெரிவு செய்­யப்­பட்ட முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்ல பாரா­ளு­மன்­றத்­தி­லுள்ள சபை முதல்வர் அலு­வ­ல­கத்தில் நேற்று புதன் கிழமை கடை­மை­களை பொறுப்­பேற்கும் நிகழ்­வி­லையே இவ்­வாறு தெரி­வித்தார்.

நேற்று புதன்­கி­ழமை காலை 9.44 மணிக்கு சபை முதல்வர் அலு­வ­ல­கத்தில் ஆவ­ண­மொன்றில் கையெ­ழுத்­திட்டு பொறுப்­புக்­களை லக்ஷ்மன் கிரி­யெல்ல எம்.பி. ஏற்றுக் கொண்­டுள்ளார்.

அதற்கு முன்­ன­ராக பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்­தவ மத அனுஷ்­டா­னங்­களும் இடம்­பெற்­றன. இந்த நிகழ்வில் சபை முதல்­வரின் உற­வி­னர்கள், பாரா­ளு­மன்ற செய­லாளர் நாயகம், முன்னாள் அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக, வேலு­குமார் எம்.பி. உட்­பட அதி­கா­ரி­களும் கலந்து கொண்­டனர்.

இங்கு தொடர்ந்து உரை­யாற்­றிய சபை முதல்வர் லக் ஷ்மன் கிரி­யெல்ல எம்.பி. இலங்­கையின் பாரா­ளு­மன்­றத்தில் இன்று புதி­ய­தொரு அர­சியல் கலா­சா­ரத்­திற்­கான பரீட்­சார்த்தம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அது தான் ஐ.தே.கட்­சியும் – ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்த தேசிய அர­சாங்­க­மாகும்.

ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு முன்னர் மைத்­திரி, ரணில், சந்­தி­ரிகா மூவரும் இணக்­கப்­பாட்டை ஏற்­ப­டுத்திக் கொண்­டதன் பிர­கா­ரமே மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­பதி பதவி ஏற்ற பின்னர் இடம் பெற்ற பொதுத் தேர்­த­லுக்குப் பின்னர் நாட்டின் இரண்டு பிர­தான கட்­சி­களும் இணைந்து தேசிய அரசு ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இதன் மூலம் இலங்கைப் பாரா­ளு­மன்­றத்தில் புதி­ய­தொரு அர­சியல் கலா­சா­ரத்தை பரீட்­சார்த்­த­மாக ஏற்­ப­டுத்­தி­யுள்ளோம்.இந்த இரண்டு வருட இணக்­கப்­பாட்டில் நாட்டின் பல பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வைக்­காண முடியும்.வடக்கு – கிழக்கு பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தற்கு தேசிய அர­சாங்கம் அடித்­த­ள­மாக அமையும்.

அத்­தோடு அர­சி­ய­ல­மைப்பில் திருத்­தங்­களை மேற்­கொள்­ளவும் நாட்­டுக்கு புதி­ய­தொரு அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கவும் பாரா­ளு­மன்­றத்தில் ஐ.தே. முன்­ன­ணிக்கு மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை தேவை.இதனை எம்மால் தனித்து ஏற்­ப­டுத்திக் கொள்­ள­மு­டியும். ஆனால் ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு முன்­ப­தாக ஏற்­ப­டுத்திக் கொண்ட இணக்­கப்­பாட்­டுக்கு அமை­யவும்.

அதே­வேளை நாட்டின் பிரச்­சி­னை­களை தீர்க்க வேண்­டு­மென்றால் பிர­தான கட்­சி­க­ளான ஐ.தே.கட்­சியும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் இணக்­கப்­பாட்டு அர­சி­யலை முன்­னெ­டுக்க வேண்டும்.இவை­ய­னைத்­தையும் கருத்தில் கொண்டே தேசிய அர­சாங்கம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இது சிறப்­பா­ன­தொரு அடித்­த­ள­மாகும். இதன் மூலம் இரண்டு வரு­டங்­க­ளுக்குள் தீர்­வு­களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

அது மட்­டு­மல்­லாது சர்­வ­தேச ரீதியில் இலங்­கைக்கு எதி­ராக முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு வெற்­றி­க­ர­மாக முகம் கொடுத்து அவற்றை வெற்றி கொள்­ளவும் இரண்டு கட்­சிகள் இணைந்த தேசிய அரசால் முடியும்.2009ஆம் ஆண்டு யுத்தம் முடிந்த பின்னர் ஐ.நா. செய­லாளர் நாயகம் பான் கீன் மூன் இலங்கை வந்தார்.

இதன் போது அப்­போ­தைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ யுத்­தத்தின் இறுதி நாட்­களில் இடம்­பெற்ற சம்­ப­வங்கள் தொடர்­பாக உள்­ளக விசா­ரணை நடத்­தப்­ப­டு­மென உறு­தி­மொழி வழங்­கினார்.அது தொடர்பில் ஐ.நா. செய­லாளர் நாய­கத்­துடன் கூட்­ட­றிக்கை வெளி­யிட்­ட­தோடு எழுத்து மூலம் உறு­தி­மொ­ழியும் வழங்­கப்­பட்­டது.

ஆனால் உள்­ளக விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. இதனால்ஐ.நா. மனித உரிமை ஆணைக்­குழு சர்­வ­தேச விசா­ர­ணையை வலி­யு­றுத்­தி­யுள்­ளது. அன்று மஹிந்த ராஜபக் ஷ வழங்­கிய உறு­தி­மொ­ழி­யையே இன்று புதிய அர­சாங்கம் நிறை­வேற்ற முன்­வந்­துள்­ளதே தவிர வேறெ­துவும் புதி­தாக இடம்­பெ­ற­வில்லை.

ஐ.நா. சபையின் உறுப்பு நாடு இலங்கை. அதன் பிர­க­ட­னங்­களில் நாம் கையெ­ழுத்­திட்­டுள்ளோம். எனவே அவற்றை நிறை­வேற்ற வேண்டும். கடந்த ஆட்­சி­யா­ளர்கள் சர்­வ­தே­சத்­துடன் முரண்­பட்டுக் கொண்­டி­ருந்­தனர்.ஆனால் எமது ஆட்­சியில் சர்­வ­தே­சத்­துடன் நட்­பு­றவை ஏற்­ப­டுத்திக் கொண்டு சர்­வ­தேச ஆத­ர­வுடன் சவால்­களை வெற்றி பெறு­கின்றோம்.

சிவில் யுத்­தங்கள் இடம்­பெற்ற நாடு­களில் பிரச்­சி­னைகள் தலை­தூக்­கு­வது இயற்­கை­யாகும்.எமது நாட்­டிலும் 1971இல் கிளர்ச்சி ஏற்­பட்­டது. பிரே­ம­வதி மனம்­பேரி கொலை செய்­யப்­பட்டார். இது தொடர்­பாக விசா­ரணை நடத்­தப்­பட்டு இரண்டு இராணுவத்தினருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.சந்திரிகா ஆட்சிக்காலத்தில் கிருஷாந்தி குமாரசுவாமி கொலை வழக்கு விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர். எனவே உள்ளக நீதி விசாரணை என்பது புதியதல்ல.

ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவுக்குச் சென்று இலங்கைக்கு உதவி வழங்க வேண்டாம் மனித உரிமைகள் மீறப்படுவதாக முறைப்பாடு செய்து எமக்கு வழிகாட்டியவர் மஹிந்த ராஜபக்ஷவாகும் என்றும் லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. தெரிவித்தார்.