மூன்று நாள் பயணமாக இந்தியா செல்கிறார் ஜனாதிபதி மைத்திரி
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த மாதம் இந்தியாவுக்கு மூன்ற நாள் பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த மாதம், 8ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவில் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். அவரது இந்தப் பயணம், பிராந்தியத்தில் பௌத்த மதத்தை ஊக்குவிப்பது தொடர்பானதாகவே அமையும் என்று புதுடெல்லி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்தப் பயணத்தின் போது, இலங்கை ஜனாதிபதி புதுடெல்லியில் இந்திய அரச தலைவர்களைச் சந்திப்பாரா என்பது பற்றிய தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த பெப்ரவரி மாதம் இந்தியாவுக்கு தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.