Breaking News

சர்வதேச விசாரணை பிரேரணையினை தடுக்க முயற்சி! பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் சதி!

வடமாகாண முதலமைச்சரினால் நேற்று முன்தினம் கொண்டுவரப்பட்ட சர்வதேச விசாரணை கோரும் தீர்மானத்தை தடுத்து நிறுத்த பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மற்றும் சுமந்திரன் ஆதரவு நபர்கள் சிலர் மேற்கொண்ட முயற்சி அமபலமாகியுள்ளது.

கட்சி தலைமையின் அங்கீகாரத்தை பெற்றே தீர்மானத்தை விவாதத்திற்கு எடுக்கமுடியுமென பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் விடாப்பிடியாக நின்றிருந்த போதும் அமைச்சர்களான குருகுலராஜா,ஜங்கரநேசன் மற்றும் டெனீஸ்வரன் ஆகியோர் தமது முழுமையான ஆதரவை முதலைமைச்சரிற்கு வழங்கியமையால் சீ.வி.கே.சிவஞானம் கும்பலது சதி தோல்வியினில் முடிந்துள்ளது.

இது தொடர்பினில் மேலும் தெரியவருகையினில் முன்னதாக கடந்த திங்களன்று நடைபெற்ற முன்னேற்பாட்டு கூட்டத்தினில் தற்போதைய சூழலினில் குறித்த தீர்மானத்தின் தேவை பற்றி முதலமைச்சர் கூட்டமைப்பினரிடையே எடுத்து கூறியுள்ளனர்.எனினும் அவ்வாறு பிரேரணையெதனையும் தன்னிச்சையாக சபையினில் சமர்ப்பிக்க முடியாதென வாதிட்டுள்ளார்.

இந்நிலையினில் நேற்று முன்தினம் காலை தன்னால் அவசர அவசரமாக தயாரிக்கப்பட்ட பிரேரணையினை முதலமைச்சர் பேரவை தலைவரிடம் முதலமைச்சர் கையளித்துள்ளார்.கட்சி தலைமையின் அனுமதியின்றி பிரேரணையினை சபை அமர்வினில் முன்வைக்கப்போவதில்லையென வாதிட்டார்.எனினும் காலத்தின் தேவை கருதி பிரேரணை முன்வைக்கப்படவேண்டுமென முதலமைச்சர் வாதிட்டதுடன் தனது நியாயத்தை முன்வைத்துள்ளார்.

ஒருகட்டத்தினில் முதலமைச்சரினை ஒருமையினில் பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் திட்டமுற்பட அமைச்சர்கள் தலையிட்டு நிலமையினை சுமூகமாக்கியுள்ளனர்.சுகாதார அமைச்சரான சத்தியலிங்கமும் பிரேரணை தற்போது அவசரமல்ல என வாதிட ஏனைய மூன்று அமைச்சர்களும் பிரேரணையின் தேவைகருதி வாதிட்டனர்.

இதனிடையே வெளியே பிரேரணையினை வலியுறுத்தி கே.சிவாஜிலிங்கம் ஆதரவு கோரி தனது சக உறுப்பினர்களிடையே பிரச்சாரங்களை மேற்கொள்ள சுமந்திரன் ஆதரவு கும்பலான அஸ்மின்,ஆனோல்ட் மற்றும் சுகிர்தன் தரப்பு அவருடன் முரண்பட்டது.காரசாரமான விவாதம் நடைபெற்றிருந்தது.

இந்நிலையினில் தனது பிரேரணை தொடர்பினில் கே.சிவாஜிலிங்கத்தை அழைத்து விளக்கமளிக்க முற்பட உயர்மட்ட சந்திப்பினில் சிவாஜிலிங்கத்தை அழைக்க வேண்டாமென சீ.வி.கே.சிவஞானம் தடுத்துள்ளார்.

இந்நிலையினில் அவை தலைவரை தடுத்து சபை அமர்வை குழப்ப கே.சிவாஜிலிங்கம் மேற்கொண்ட ஏற்பாடு முதலமைச்சரது வேண்டுகோளினையடுத்து கைவிடப்பட்டிருந்தது.போராட்டத்தை விலக்கிக்கொண்ட சிவாஜிலிங்கம் சபை அமர்வினில் கலந்து கொண்டதுடன் முதலமைச்சரின் பிரேரணையினை ஆதரிக்கவும் வழிகோலியிருந்தது.

எனினும் சபை அமர்வினில் பல விடயங்களினில் பேரவை தலைவர் தனது பதவி நிலையினை கடந்து முதலமைச்சருடன் வாக்குவாதத்தினில் ஈடுபட்டதுடன் கட்டைபஞ்சாயத்தினில் ஈடுபட்டமை ஆளும் மற்றும் எதிர்தரப்புக்களிடையே விசனத்தை தோற்றுவித்திருந்தது.

முதலமைச்சரது பிரேரணை நிறைவேற்றப்படும் வரையினில் சுமந்திரன் ஆதரவு கும்பலினை சேர்ந்த ஆனோல்ட் சுகாதார அமைச்சரென தடுத்து நிறுத்த பாடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.