Breaking News

இலங்கை வந்தடைந்தார் ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர்



உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் பிராங்க் வோல்ட்டர் ஸ்டெய்ன்மியர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந் துள்ளார்.

இவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், வடக்கிற்கு செல்லவுள்ள ஜேர்மனிய அமைச்சர், கிளிநொச்சியில் நிறுவப்பட்டு வரும் ஜேர்மன் பயிற்சி நிலையத்தையும் பார்வையிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.