Breaking News

சேயாவின் படுகொலையை கண்டித்து யாழ்.நுண்கலைப்பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட 5 வயதான சேயாசதவ்மியின் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப்பீட மாணவர்களால் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

சிறுமியின் அநீதிக்கு தகுந்த நீதி வேண்டும்,குழந்தைகளுக்கான வன்முறையை எதிர்ப்போம்' மற்றும் 'சிறுமியை கொலை செய்த கொலையாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும்' ஆகிய வாசகங்களை உள்ளடக்கிய பதாதைகளை தாங்கியவாறு இந்த கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.