கல்வி அமைச்சினால் தமிழ் மொழி தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருவதாக ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு
கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுவரும் விடயங்களில் தமிழ் மொழி தொடர்ந்தும் நிராகரிக்குப்பட்டுவருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது.
கல்வி அமைச்சில் இடம்பெறுகின்ற அமர்வுகளின்போது தமிழ் மொழியிலான மொழிபெயர்பு அன்றேல் தமிழ் மொழியில் அமர்வுகள் இடம்பெறாமை கவலை தருவதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளரான ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதனால் முழுமையான விளக்கங்களை பெற்று அவற்றை நடைமுறைப்படுத்த தமிழ் மொழிமூல ஆசிரியர்களுக்கு தடங்கலாக இருந்தவருவதாக தெரிவித்தார்
இதற்கு உதாரணமாக இந்த வாரம் கல்வி அமைச்சில் நடைபெற்ற 1000 பாடசாலைகள் திட்டம் தொடர்பான கூட்டமொன்றில் தனி சிங்கள மொழியில் அமர்வுகள் இடம்பெற்றமையை சுட்டிக்காட்டியிருந்தார்.
நாட்டில் உள்ள 97 கல்வி நிர்வாக வலயங்களில் 24 வலயங்கள் தமிழ்மொழி நிர்வாக வலயங்களாக உள்ள போதிலும் அமைச்சினால் பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்படும் அறிவுறுத்தல்கள் மற்றும் சுற்றறிக்கைகளில் கூட சில சந்தர்ப்பங்களில் தமிழ் மொழிக்கு உரிய இடம் கிடைப்பதில்லை என்றும் தெரிவித்தார்.
அறிவுறுத்தல்கள் மற்றும் சுற்றறிக்கைகள் தமிழ்மொழி மூல பாடசாலைகளுக்கு தாமதாகவே அனுப்பி வைக்கப்படுவதாகவும் அன்றேல் தனியாக சிங்களத்தில் மட்டும் அனுப்பி வைக்கப்படும் என்று ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டுகின்றார்.








