Breaking News

சிரிய அகதிகளுக்கு மேலும் 100 கோடி டாலர் நிதியுதவி

மத்திய கிழக்கிலுள்ள சிரிய நாட்டின் அகதிகளுக்காக பணிபுரியும் ஐ.நா. அமைப்புக்களுக்கு மேலும் நூறுகோடி
டாலர் நிதியுதவி அளிக்க ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் உறுதியளித்துள்ளனர்.

மிகப் பெரிய அளவில் அகதிகள் மற்றும் குடியேறிகள் இனிமேல் தான் வரவிருக்கின்றனர் எனவும், ஐரோப்பிய வெளி எல்லைகள் பாதுகாக்கப்படுவது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் பிரசல்ஸில் நடந்த அவசர கூட்டமொன்றின் பின்னர் பேசிய, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க் எச்சரித்துள்ளார்.

தற்போது வழங்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்ட நிதி லெபனான், ஜோர்தான் மற்றும் துருக்கியில் செயற்படும் ஐ.நா. அமைப்புக்களுக்கு அனுப்பப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.