Breaking News

வடக்கில் இன்னமும் 25 ஆயிரம் பேர் முகாம்களில் உள்ளனர்!

இலங்கையில் இன்னமும் 25ஆயிரம் பேர் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் தங்கி வாழ்வதாக என்.ஏ.எப்.எஸ்.ஓ எனும் அரசசார்ப்பற்ற நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், யாழ். குடாநாட்டில் அமைந்துள்ள 38 நலன்புரி மையங்களில் 25ஆயிரத்து 328 பேர் தங்கியுள்ளனர்.இதேவேளை, வடக்கு கிழக்கில் பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்டு 89ஆயிரம் குடும்பங்கள் உள்ளதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் இடம்பெயர்ந்தோர் மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு திரும்ப நீண்டகால காணி உரிமைகள் அவசியம் என்றும் அந் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.