எக்னெலிகொடவை இரண்டு தடவைகளும் ஒரே தரப்பா கடத்தியது
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலி கொடவை இரண்டு தடவைகளும் ஒரே தரப்பா கடத்தியது என்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
எக்னெலிகொட முதல் தடவையாக 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ம் திகதி கடத்தப்பட்டிருந்தார்.அதன் பின்னர் 2010ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு இரண்டு தினங்களுக்கு முன்னதாக அதாவது ஜனவரி மாதம் 24ம் திகதி எக்னெலிகொட கடத்தப்பட்டிருந்தார்.
எக்னெலிகொட புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இந்த தொடர்புகள் ஊடகவியலாளர் என்ற அடிப்படையில் பேணப்பட்டதே தவிர வேறும் குற்றச் செயல்களின் அடிப்படையிலானதல்ல என தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பில் தொடர்ச்சியாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.